மழையுடனான காலநிலை தொடர்ந்து அதிகரிக்கும்…

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, இன்று(12) பிற்பகல் 2.00 மணியின் பின்னர் நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறித்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக மேல் , மத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்கள் போன்று அம்பாறை , மட்டக்களப்பு , குருணாகலை போன்ற மாவட்டங்களில் சுமார் 100mm அளவில் கடும் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 Km வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.