மழையுடனான வானிலை படிப்படியாக குறைவடையும்

(FASTNEWS|COLOMBO) – நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் கடும் காற்றுடன் கூடிய நிலையும் நாட்டில் காணப்படும் மழை நிலைமையும் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தற்போது காணப்படும் கடும் காற்றுடன் கூடிய நிலை இன்றிலிருந்து (ஜுலை 23ஆம் திகதி) படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.