நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.