தற்பொழுது நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 12 மணியுடனான 24 மணித்தியால காலப்பகுதியில் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் மததும்பற பிரதேச செயலக பிரிவுக்கும் உடதும்பர பிரதேச செயலக பிரவிற்கும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குரான்கெத் பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களிற்கும் மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச அனர்த்தவலயத்தில் வாழும் மக்கள் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.