நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை சற்று அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், அனுராதபுரம், வவுனியா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடுமென வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.