எதிர்வரும் 6 ஆம் திகதி வரை காற்றின் வேகம் அதிகரிப்பு…

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் மாகாணத்திலும் மொனராகலை, மாத்தளை, நுவரெலிய மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் 75 மில்லி மீட்டருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் எதிர்வரும் சில நாட்களுக்கும் அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், தென் மாகாணத்திலும் மொனராகலை, மாத்தளை, நுவரெலிய மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீட்டர் வரை காற்று அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.