மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு பொழுதுகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவ கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் காலி, மன்னார் மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பொழியும் போது குறித்த பிரதேசங்களில் 70 – 80 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என குறித்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.