மழையுடன் கூடிய காலநிலை…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(25) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என ;வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், ஹம்பாந்தொடை மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இன்று மாலை வெப்ப காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.