குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த மழை காலத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு குடிக்க சூப்பரான ஹாட் சாக்லேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் – ஒரு கப்,
கோகோ பவுடர் – ஒரு டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டைத் தூள் – ஒரு சிட்டிகை,
சர்க்கரைத் தூள் – சிறிதளவு.
செய்முறை :
கால் கப் காய்ச்சிய பாலில் கோகோ பவுடரை நன்றாக கரைக்கவும். மீதி பாலை அடுப்பில் வைத்து சூடானதும் கோகோ – பால் கரைசலை சேர்க்கவும்.
அடுத்து இதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சூடான சாக்லேட் பாலை பரிமாறும் கிளாஸில் மாற்றி, மேலே பட்டைத் தூள், சர்க்கரைத் தூள் தூவி பரிமாறவும்.
சூப்பரான ஹாட் சாக்லேட் ரெடி…