(ஃபாஸ்ட் நியூஸ் | பங்களாதேஷ்) – பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் மஷ்ரஃப் மொர்டாசா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி மஷ்ரஃப் மொர்டாசா, நஸ்முல் இஸ்லாம் மற்றும் நபீஸ் இக்பால் ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இந்நிலையில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மஷ்ரஃப் மொர்டாசா குணமாகியுள்ளதாக அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3,710 பேர் உயிரிழந்துள்ளனர்
மேலும், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பங்களாதேஷிற்கான சுற்றுப்பயணம் இடம்பெற மாடாது என பங்களாதேஷ் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Hope everybody is well. Alhamdulillah. By the grace of God and with the blessings of all of you, the result of my corona virus test is negative. Gratitude to all those who have been by my side all this time, who have prayed for me thanks a lot pic.twitter.com/TkYiBJDGCW
— MASHRAFE BIN MORTAZA???? (@mashrafebd) July 14, 2020