அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று(26) காலை 8 மணிமுதல் கொழும்பின் புறநகர் பகுதியில் 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மஹரகம, பொரளஸ்கமுவை, கொட்டாவ, பன்னிப்பிட்டி, ஹோமாகம, மீபே, பாதுக்கை, பெலன்வத்தை, ருக்மல்கமை, மத்தேகொட முதலான பகுதிகளில் இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.