மஹரகம நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று(22) அதிகாலை 4.30 மணியளவில் தீவிபத்தொன்று ஏற்பட்டது.
குறித்த தீ விபத்தில் வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், சுமார் இரண்டு கோடியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தக நிலைய உரிமையாளரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
கடந்த 13 வருடங்களாக குறித்த வர்த்தக நிலையம் இந்த இடத்தில் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நேற்று(21) இரவு வர்த்தக நிலையம் மூடப்படும் போது, அங்கிருந்த பிரதான மின்சார கட்டமைப்பு ஓப் செய்யப்பட்டதாக வர்த்தக நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்