மஹர மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் போதைபொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹய்பிரிட் வாகனமொன்றில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.