மஹாநாம தேர்தலில் களமிறங்குவது பொய்யானது…

தான் அரசியலில் இணைவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளளார்.

இது குறித்து செய்தி வெளியிட்டிருந்த செய்தித் தாள் குறித்து தான் ஆச்சரியப்பட்டதாகவும் அரசியல் பிரவேசம் குறித்து எவ்வித எண்ணமும் இல்லை என்றும் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

தான் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் நாட்டுக்கு உயரிய சேவையினை ஆற்றியுள்ளதாகவும் எச்சந்தர்ப்பத்திலும் அரசியலில் தலையிடவில்லை என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.