மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்…

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவு பிறப்பித்துள்ளது.