மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…

இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்ற வேளையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச – மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டது.

கத்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பங்கினை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கைமாற்றுவதற்காக, குறித்த நிறுவனத்திடம் இருந்து 54 கோடி ரூபாய்களை அவர்கள் இலஞ்சமாக கோரிய நிலையில், குறித்த தொகையின் முற்பணத்தை பெற்றுக் கொண்ட வேளையில் இலஞ்ச மற்றும் ஊழல் தவிர்ப்பு பிரிவினரால் கொழும்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.