மஹிந்தரின் இரகசிய சந்திப்பில் 20 சட்டத்தரணிகள் பங்கேற்பு

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு தனது மிரிஹான வீட்டிற்கு சுமார் 20 சட்டத்தரணிகளை அழைத்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தற்போதைய காலகட்டம் வரையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் மிகவும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் கூடிய சட்டத்தரணிகள் அந்த இடத்தில் இரகசிய சந்திப்பு நடத்துவதற்கு தகுதியான சூழல் இல்லை என கூறி ராஜபக்ஷ குடும்பத்தினரின் உதவியுடன் சட்டத்தரணிகள் லொகான் ரத்வத்தவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு எச்சரிக்கை செய்தியினை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்ஷ குடும்ப பணம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் முன்வைத்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் டுபாய் இந்த எச்சரிக்கை செய்தியினை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விடயம் இராஜதந்திர பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அரசாங்கம் பிரச்சினையை தடுப்பதற்கு உயர் அமைச்சர் ஒருவரையும் சட்டத்தரணி ஒருவரையும் டுபாய்க்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.