ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய 10 சிரேஷ்ட உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்துச் செய்து, கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி மற்றும் கட்சியின் தலைமைத்துவத்தை தொடர்ந்து விமர்சித்து கட்சியின் வெற்றி பாதைக்கு தடையை ஏற்படுத்தும் உறுப்பினர்களுக்கு எதிராகவே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையாக சீர்திருத்தம் செய்து கட்சியை வலுவடைய செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் சீர்திருத்த நடவடிக்கைக்கு தடையேற்படுத்தி கட்சியினுள் தனியான குழுவொன்றை கட்டியெழுப்புவதற்கு இந்த நபர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதே இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள முதல் குற்றச்சாட்டாகும்.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் அனைவருக்கும் எதிராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடுமையான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மே தின பேரணியில் கலந்து கொள்ளாமல் கிருலப்பனை மேதின பேரணியில் கலந்துகொண்ட எந்தவொரு உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு வழக்கப்பட மாட்டாதெனவும், கட்சியின் ஒழுக்காற்றுகளை மீறி தவறு செய்கின்ற அனைவருக்கும் மன்னிப்பு வழங்கினால் கட்சி மீதமாக இருக்காதெனவும் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.