மஹிந்தவினால் மூடிமறைக்கப்பட்ட அறிக்கைகளை மைத்திரி வெளியிடத் தீர்மானம்

ஆறு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது மறைத்து வைக்கப்பட்டிருந்த உதாலகம ஆணைக்குழு அறிக்கையை எதிர்வரும் நாட்களில் வெளியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காணாமல் போனோர் தொடர்பிலான மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையுடன் இவ்அறிக்கையையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளது.

உதாலகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு செயற்பாட்டாளர்களினால் விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும் எதிர்வரும் விசாரணைகளுக்காக முழுமையான அதிகாரம் கொண்ட நிலையான ஆணைக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைப்பதாக குறித்த ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தங்கள் விசாரணைகளின் முக்கியமாக சாட்சியாளர் வெளிநாட்டில் வசிப்பதாகவும், அவர்களின் சாட்சிகளை பெற்றுகொள்வதற்கு ஆணைக்குழு பயன்படுத்துவதற்காக காணொளி உரையாடல் வசதிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளமையினால் மேலதிக சாட்சிகளை பதவி செய்து கொள்ள முடியவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மாணவர் கொலை, மூதூரில் உதவிப் பணியாளர்கள் கொலை உட்பட சம்பவங்கள் பல தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இவ்ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சர்வதேச கோரிக்கைகமைய நியமிக்கப்பட்டது.

எனினும் குறித்த சந்தர்ப்பத்தில் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டிருந்த அறிக்கை மஹிந்த ராஜபக்ஷவினால் மூடி மறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(riz)