வற் வரி அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருவதாக பிரதி அமைச்சர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
மேலும் கல்வித்துறையில் எந்தவொரு வரி அதிகரிப்பும் புதிதாக அறவிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் ,இவை தொடர்பாக பொய்யான தகவல்களை தெரிவித்து மக்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதை முன்னாள் ஜனாதிபதி தவிர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல தவறான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
இந்த அறிக்கையில் முன்பள்ளி கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை அரசாங்கம் வரி அறவீட்டை மேற்கொண்டுள்ளதாகவும் மஹிந்தவால் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ஸ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனவே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச உண்மையான விடயங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அறிக்கை வெளியிட வேண்டும் என பிரதி அமைச்சர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
