மஹிந்தவின் சீன விஜயத்திற்கான சகல வசதிகளையும் வழங்குமாறு பிரதமர் பணிப்பு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள சீன விஜயத்துக்கான சகல இராஜதந்திர ஏற்பாடுகளையும் குறைவின்றி செய்து கொடுக்குமாறு வெளிவிவகார அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் ஒரு வார காலத்துக்கு இவரது விஜயம் அமையவுள்ளது.

சீனாவின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று இவர் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளதனால், தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் பிரதமர் கேட்டுள்ளார்.