மஹிந்தவின் பிரதமர் நியமனம் அரசியலமைப்பிற்கு எதிரானது – நான் சுயாதீனமாகவே இருப்பேன் – வெல்கம…

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று(07) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

“.. மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையினை நிரூபித்தாலும் நான் அவரது அமைச்சில் அமைச்சர் பதவியினை ஏற்கமாட்டேன். பிரதமர் நியமனத்தில் அரசியலமைப்பினை மீறியதொன்றாகவே நான் கருதுகிறேன்.. இதை விடமும் வித்தியாசமான முறையில் பிரதமர் பதவியினை மஹிந்த ஏற்றிருக்க கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்.

இந்நாட்டில் இப்போது இரண்டு பிரதமர்கள். ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் இருக்கிறார். ஒருவர் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகையில் இருக்கிறார். இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

யார் இவர்களில் சரியான பிரதமர். எமது தலைவர் மஹிந்த பிரதமராகியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் இந்த பிரச்சினையை இதனை விடவும் சிறப்பான வழியில் தீர்த்திருக்க முடியும்.

நான் ஒரு போதும், கட்சித் தாவமாட்டேன். மஹிந்தவுக்கு113 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. அதனைக் காண்பித்தால் பிரச்சினைத் தீர்ந்து விடும்..” என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.