முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு எதிர்க்கட்சி இணைவதற்கு கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான அழைப்பு தெளிவான அரசியல் சூழ்ச்சி என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சாடியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணக்கப்பாட்டு அரசியல் ஈடுபட ராஜபக்ச தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் மூலம் சாதகமான நடவடிக்கையினை முன்னெடுப்பதுடன், எதிர்வரும் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் இருவரும் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.