மக்கள் ஊடக மையத்தினால் (பிஎம்சி) இன்று (9) பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்முறைப்பாட்டு அறிக்கையில் மேற்கோள் காட்டியதாவது;
“USA போன்ற நட்பு நாடுகளில் புலிகள் இன்னும் வசித்து வருகின்றனர். கொலைகள் தொடர்ந்த நிலையில்; அதற்கான தண்டனைகள் கொடுத்தபாடில்லை, குற்றவாளிகள், கூறப்படும் கொலை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து, புலிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள், இதன் பிற்பாடே மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கலாம்” என்பதை முறைப்பாடு மேற்கோள் காட்டியிருந்தது ..
பிஎம்சி தேசிய அமைப்பாளர் நிமல் வீரதுங்க கூறுகையில்; விசாரணையின் போது வாய்வழி மற்றும் எழுத்து மூலமான ஆதாரங்கள் முன்வைக்க அவற்றை நம்பிக்கை கொள்கின்றனர்.
இம்முறைப்பாட்டின் பிரதிகளை ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கும் அனுப்பியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.