மஹிந்தவில் தொல்லை தாங்காது, நாமல் தீர்மானமிக்க திடீர் முடிவில்..

மக்கள் சக்தி கொழும்பிற்கு எதிர்ப்புப் பேரணியானது வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், தாம் எதிர்பார்க்காத மக்கள் அலை கொழும்பிற்கு வந்திருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊடக செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

பேரணி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ எனக்கு எதுவும் திட்டவில்லை என்றும், என்றாலும் திருமணம் தொடர்பில் தான் தாமதித்து வருவதற்கு திட்டுவதாகவும் நாமல் இதன்போது தெரிவித்திருந்தார்.

தனது திருமணமாது எதிர்வரும் வருடத்தில் இடம்பெறும் எனவும், அதற்கான இடங்கள் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரிவித்த நாமல், அலரி மாளிகையினை ஒதுக்க நினைத்திருந்த போதிலும் அதனை தற்போது ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.