மஹிந்தவுக்கு நல்ல நேரம் வரும் வரையில் பாராளுமன்றம் கூடாதாம்…

சோதிடம் பார்ப்பதினை முக்கிய கடமையாக மேற்கொண்டு வரும் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது பாராளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலும் அவரது பாராளுமன்ற அமர்வு தொடர்பிலும் சோதிடம் பார்த்திருப்பாரோ என அலசுவதில் சிறு சந்தேகம் நிலவுகின்றது எனலாம்.

அது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி எதிர்வரும் 7ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு பணித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று(02) தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதுகுறித்து தெரிவிக்கையில்,பாராளுமன்றமானது எதிர்வரும் 05ம் திகதி கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று(02) ஊடக சந்திப்பொன்றில் மஹிந்தானந்த அலுத்கமகே எதிர்வரும் 16ம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதாக குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.