மஹிந்தவுக்கு, பயிற்சியாளர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மாலி அமைதியானார்..

(FASTGOSSIP | COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று(26) இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியுடன் இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார்.

இதுவரை 226 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்க இதுவரை 338 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

லசித் மாலிங்கவின் ஓய்வில் ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

R.Rishma