முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகிக்க முடியும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் 43ம் சரத்தின் 3ம் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை பலமுடையவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையினரின் நம்பிக்கையை வென்றவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு கடப்பாடு உண்டு என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றின் பெரும்பான்மை பலமின்றி உருவாகும் அரசாங்கம் ஸ்தீரமற்றதாகவே அமையும்.
அது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நிகரான செயற்திறனற்ற, ஸ்தீரமற்ற அரசாங்கமாகவே கருதப்பட வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
(riz)