மஹிந்தவுக்கு வேட்புமனு கொடுப்பது தமது கையில் இருக்கவில்லை – மைத்ரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கலில் இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றிக்காக பாடுபட்ட சிவில் குழுக்களை ஜனாதிபதி கடந்த புதன்கிழமையன்று சந்தித்துள்ளார்.

இதன் போதே, சிவில் குழுக்கள், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தாம் தனிப்பட்ட ரீதியில் மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கலை எதிர்த்ததாகவும், எனினும் இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டதாக சிவில் குழுக்களின் சார்பில் ஜனாதிபதியை சந்தித்த தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான சமன் ரத்னபிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் மாதுலுவேவே சோபித தேரர் அதில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

இவரே மைத்திரியின் வெற்றிக்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(riz)