மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) இலங்கை சுதந்திரக் கட்சியின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் மைத்திரி பால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது:
“மஹிந்த ராஜபக்ஷவுடன், இணைந்து செயலாற்றிய போதே அவரது அனைத்து மோசடி வேலைகள் குறித்தும் தெரிந்து கொண்டுள்ளேன். யாரை பிரதம வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்” என கடுந் தொனியில் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நான் ஒருபோதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக செயற்பட மாட்டேன்.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தவும், எனது உயிருக்கு உத்தரவாதமாகவும் செயற்பட்டவர் அவரே எனவும் தெரிவித்துள்ளார்.