மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க திருடர் கூட்டம் முயற்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தற்போதும் நாட்டின் நாடாளுமன்றம் திருட்டு கும்பல் வசம் காணப்படுகின்றதாகவும், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு அந்த திருடர் கூட்டம் தயாராகி வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

யாழ். கச்சேரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷ அலிபாபாவும் அவருடன் சேர்ந்து மக்களின் வரி பணங்களை சுரண்டிய திருடர்கள் மீண்டும் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவை கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

ஏனெனில் 21 ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியிடம் இருக்கின்ற அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனாதிபதியிடம் இருக்கின்ற அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்கும் போது பிரதமர் அதிகாரம் கொண்டவராக காணப்படுவார்.