மஹிந்தானந்தவின் கைது அரசியல் தலையீட்டினால் நிறுத்தம் – FCID அதிர்ச்சி

கடந்த ஆட்சியின் போது விளையாட்டுத்துறை அமைச்சராகவிருந்த மஹிந்தானந்த அளுத்கமகே பொலிஸ் நிதி குற்றப்பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்படவிருந்த நிலையில் அரசியல் தலையீடு காரணமாக இந்த செயல் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.

அத்துடன் இவரது அமைச்சின் முன்னாள் செயலாளரான நந்த மல்லவாராய்ச்சியும் கைது செய்யப்படவிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவரது பதவிக்காலத்தின் போது கெரம்போட் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவரைக்கமைய இவர்கள் இருவரையும் கைது செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு மீண்டும் வரும் வரை இவர்களை கைது செய்ய வேண்டாம் என்று அரசியல்வாதி ஒருவர் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பொலிஸ் நிதி குற்றப்பிரிவினர் செய்வதறியாது திகைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.