பன்றி இறைச்சிகளை நன்றாக தின்று விட்டு இங்கே வந்து நல்லவர்களை போல் நடிக்கின்றார்கள் என ஆனந்த அளுத்கமகே கடுமையான தொணியில் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் மகிந்தானந்த அளுத்கமகே கூறிய கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் மஹிந்தானந்த உரையாற்றும் போது,
மரக்கடத்தல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றார்கள், இது வரையில் நான் நினைத்திருந்தேன் பன்றிகளை வேட்டையாடுகின்றவர்கள் மட்டுமே இவர்கள் என்று.
ஆனாலும் சூழலை அழித்து மரக்கடத்தல்களையும் ஈடுபடுபவர்கள் இவர்கள் என இன்றே தெரிந்து கொண்டேன் தயவு செய்து அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மஹிந்தானந்த, ஆனந்த அளுத்கமகேவை குறிவைத்து குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
இந்த வார்த்தைகளால் வெகுண்ட ஆனந்த அளுத்கமகே,
வேட்டையாடிய பன்றிகளை தின்று தீர்த்தவரே நீர்தானே, உங்களது உண்மை முகம் தெரிந்து தானே நாவலப்பிடிய தொகுதியில் தோல்வி கொடுக்கப்பட்டது.
உங்களை அரசியல் வாழ்வில் இருந்து தோல்வியடைய வைத்து விட்டே நான் அரசியலில் இருந்து வீடு செல்வேன் என்பது உறுதி.
மனைவிகளுக்கு மட்டும் இவ்வாறானவர்களுக்கு பஞ்சம் இல்லை, வெட்கம் இல்லாதவர்கள் அளுத்கமகே வீரசிங்க, கங்கா அளுத்கமகே என ஒரே பெயர்கள் வந்தது எவ்வாறு என தெரியுமா?
ஆடம்பரமாக உடையணிந்து கொண்டு நல்லர்களைப் போல் நடிக்கும் திருடர்கள் சூழல் மாசு பற்றி பேசுகின்றார்கள், எனவும் முறைகேடான பல வார்த்தைகளையும் பிரயோகித்து ஆனந்த அளுத்கமகே கடுமையாக திட்டியமை குறிப்பிடத்தக்கது.