மஹிந்தானந்தவுக்கு பிணை வழங்கி கடவுச்சீட்டை வாங்கியது நீதிமன்றம்..

நிதி மோசடி(39 இலட்சம் ரூபா ) உள்ளிட்ட மூன்று விடயங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று(22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, 20 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் அவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், மஹிந்தானந்தவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதிவாதி தரப்பில் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை ஜூன் 27ம் திகதிக்கு முன்னர் தெரிவிக்குமாறும் நீதவான் மேலும் அறிவித்துள்ளார்.

(rizmira)