Update – பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பிணை…

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பிணையில் செல்ல இன்று(16) கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

++++++++++++++++ UPDATE 15:20 pm

மஹிந்தானந்த அளுத்கமகே FCID இனால் கைது…

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

++++++++++++++++ UPDATE 11:02 am

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த FCID முன்னிலையில் ஆஜர்…

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று(16) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்டபோது விளையாட்டுப் உபகரணங்கள் இறக்குமதி மற்றும் பங்கிடுதலின் போது சுமார் 53 மில்லியன் ரூபாய்களை மோசடி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Rishma