மஹிந்தானந்த இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே இன்று பாரிய மோசடிகள் குறித்து ஜனாதிபதி விசாரணைக் குழுவின் எதிரில் முன்னிலையாக உள்ளார்.

இலங்கை புகையிரத திணைக்களத்தில் இடம்பெற்ற அரச சொத்து துஷ்பிரயோகம்  தொடர்பிலான விசாரணைகளுக்காக மஹிந்தானந்த அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்கு மூலம் ஒன்றை பதிவதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை மஹிந்தானந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.