இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேயிடம் விசாரணை மேற்கொள்வதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி செய்த முறைப்பாடுக்கு அமைய இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு செப்டம்பர் 26 ஆம் திகதிக்கு நீதிமன்றுக்கு அறிக்கைப்படுத்துமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
நிஷாந்த ரணதுங்க, காளிங்க இந்றதிஸ்ஸ ஆகியோருக்கு எதிராகவும் இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது