மஹிந்த்ரா நிறுவனம் இலங்கையின் வாகன நிறுவனத்துடன் கைகோர்க்கிறது..

மஹிந்த்ரா மற்றும் மஹிந்த்ரா நிறுவனம் இலங்கையின் ஐடியல் மோட்டார் நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து இலங்கையில் வாகனங்களை விற்பனை செய்யும் வியாபாரம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருதரப்பினருக்கும் இடையில் இடம்பெறவுள்ள குறித்த வியாபாரத்தில் 35% பங்கு மஹிந்த்ரா நிறுவனத்தின் கீழ் இடம்பெறவுள்ளதோடு, ஏனையவை ஐடியல் மோட்டார் நிறுவனத்திற்கும் அதன் பங்குதார நிறுவனத்திற்கும் சொந்தமாகும்.

அதன்படி, மஹிந்திரா நிறுவனம் இலங்கை ரூபாவில் 25 கோடியினை முதலீடாக இலங்கைக்கு வழங்கவுள்ளது. எனினும், எவ்வகையான வாகனங்களை சேர்ப்பது என்பது குறித்து இதுவரையில் குறித்த நிறுவனங்களால் தெரிவிக்கப்படவில்லை.