தற்பொழுது நிறைவுக்கு வந்துள்ள சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை, அமைச்சுப் பதவியிலிருந்து விலகியாவது, நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர பகிரங்க வாக்குறுதியளித்தார்.
கொழும்பில் நேற்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னதாக இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு தீர்வு காணப்படல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“..மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் முதலில் வெளிப்படுத்தியவன் நான். தற்பொழுது கூறிக் கொள்ளும் அரசியல் புத்தஜீவிகள் அல்லர். நான் தான் அதனை முதலில் ஆணைக்குழுவுக்கு எடுத்துச் சென்றேன். இதனை நீதிமன்றத்துக்கும் எடுத்துச் செல்வேன். அதற்கு இந்த அமைச்சுப் பதவி தடையாக இருந்தால், அதனை விட்டுவிட்டு செல்லவும் தயார்..” எனவும் அவர் அறிவித்தார்
(rizmira)