ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கட்சித் தலைமை என்பவற்றை விமர்சித்து கட்சியின் ஒழுங்கு முறைகளுக்கு எதிராக செயற்பட்டதாக கூறப்படும் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர்களிடமும் எதிர்வரும் கட்சியின் 65 ஆவது நிறைவு தினத்துக்கு முன்னர் விளக்கம் கோரப்படும் என கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு இது தொடர்பிலான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த அதிகாரத்தை வழங்கியதாகவும் செயலாளர் கூறியுள்ளார்.
ஊடகங்களின் வீடியோ பதிவுகள், அரச புலனாய்வுத் துறையினால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதன் பின்னர், அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் துமிந்த திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்