மஹிந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 13பேர் சீனா பயணம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 சேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா – இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் குறித்த இந்த விஜயம் அமையவுள்ளது. பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களே சீனா செல்லவுள்ளனர்.

சீனா செல்லும் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்  அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.