முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ள அக்கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“அடுத்த மாதம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளப் போவதாக, சுதந்திரக் கட்சியின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர். இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அடங்கியுள்ளார்.
அரசாங்கத்தில் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் புதிய கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கட்சியில் இணைந்து கொண்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர்களின் நாடாளுமன்றப் பதவிகளைப் பறிப்பதற்கான, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
எனினும், அவர்களை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக நீடிப்பதை உறுதி செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
மஹிந்த’வின் தலைமைத்துவத்தில் அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருகிறது.
புதிய கட்சியின் நோக்கம், அரசை கவிழ்ப்பது அல்ல. ஆனால் அதனை ஆட்டம் காணவைக்கும். பலவீனப்படுத்தும்.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)