மஹிந்த தலைமையில் இன்றும் கூடுகிறது ஒன்றிணைந்த எதிர்கட்சியினர்..

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் நாட்டில் நிலவும் அரசியில் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று(16) காலை விஜயராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்குவது சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும், நேற்றும்(15) முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma