மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கும் அமைச்சர்கள் தமது பதவிகளில் செயற்படுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டுள்ளது.
+++++++++++++++++++++++++++++++ UPDATE
மஹிந்த தாக்கல் செய்த மனு இன்று(16) உயர் நீதிமன்ற விசாரணைக்கு…
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கும் அமைச்சர்கள் தமது பதவிகளில் செயற்படுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை இன்று(16) உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்பினர் கடந்த டிசம்பர் மாதம் 03ம் திகதி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.