மஹிந்த தோற்பார் எனக்கூறிய ஜோதிடர் ரோஹன, ரணில் மற்றும் கோத்தா ஜனாதிபதி ஆவார் என ஆரூடம்.. (VIDEO)

அரசியலில் ஜோதிடம் கூறுவது இன்று பிரபலாமியுள்ள நிலையில் இலங்கையின் அரசியல் குறித்தும் 2020ம் ஆண்டுக்கான ஜனாதிபதி குறித்தும் பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி கருத்துத் தெரிவித்துள்ளார்.

“சர்வதேசரீதியில் இதுவரை இருவருக்கு ஜோதிடம் குறித்து எதிர்வு கூறியுள்ளேன். அவை, இந்தியாவில் மோடி வெற்றி பெறுவதும், அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதுமாகும்.

முழு உலகமுமே அமெரிக்கத் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதாக பிரச்சாரங்களை முன்னெடுத்த நிலையில் இந்திய ஜோதிடர்களும் ஹிலாரியையே குறி வைத்தனர். ஆனால் நான் டொனால்ட் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் என ஆரூடம் செய்தேன்.

அதற்கு அவர்கள் இருவரது நேரங்களை கணக்கில் கொண்டு இணைய உதவியுடன் ஜோதிடம் பார்த்து வெற்றி பெறுவது ட்ரம்ப் என உலகிற்கே எதிர்வு கூறினேன். அது உண்மையாகியது. அவ்வாறே மோடி இந்தியாவின் பிரதமராவார் எனவும் எதிர்வு கூறினேன். அதுவும் சர்வதேச ரீதியில் உண்மையாகியது”

மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவதாகவும் உள்நாட்டு தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் தெரிவித்திருந்தார். அதேபோன்றே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், அவரது உயிருக்கு ஆபத்து எனவும் அக்காலத்திலேயே குறித்த ஜோதிடரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே ரணில் பிரதமராவார் எனவும் தெரிவித்திருந்தார்.

அவ்வாறே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி இறையடி சேர்வார் எனவும் ஜோதிட ஆரூடத்தினூடாக விஜயமுனி தெரிவித்திருந்தார்.

மேலும், எதிர்வரும்  2020ம் ஆண்டு ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ 5 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வு செய்யப்படுவார் என ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி கூறியுள்ளார்.

குறித்த ஜோதிடம் பிழைத்தால் இதன் பிற்பாடு தான் ஜோதிடம் சொல்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதியாவார். அதன் பிற்பாடே 2020ம் ஆண்டு கோத்தபாய ஜனாதிபதியாகவும் மஹிந்த பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார் எனவும் ஜோதிடர் விஜயமுனி மேலும் கூறுகிறார்.

குறித்த ஜோதிட வீடியோவானது;

[youtube url=”https://www.youtube.com/watch?v=YKDfTqqSWAs” width=”560″ height=”315″]