முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேரை நீதிமன்றத்திற்கு அழைப்பது தொடர்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டமை தொடர்பில் தீர்வு நாளை மறுதினம் வெளியிடப்படும் என கொழும்பு வணிக நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன இன்று தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரசாரப் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து 142 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரை பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது இலங்கை போக்குவரத்து சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிவாதிகள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்புமாறும் அது குறித்து ஊடகங்களுக்கு அறிவிப்பதற்கு சந்தரப்பம் வழங்குமாறும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்