மஹிந்த பக்கம் குடைசாயும் மேர்வின்..

தவறு செய்த சகோதரர்களை கைவிடுவதாயின் தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை ராஜபக்ஷ குடும்பத்துடன் கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்ட அவர், களனியில் பிரச்சினைகளை தோற்றுவித்தது பசில் ராஜபக்ஷ எனவும் சுட்டிக்காட்டினார்.

இன்னும் பல விடையங்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்த மேர்வின் சில்வா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ தொடர்பில் தான் இன்னும் அமைதிக் கொள்கையை கடைபிடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.