மஹிந்த மற்றும் ரணில் கூட்டு அரசாங்கத்தை ஸ்தாபிக்கலாம் – சி.வி. யோசனை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்ரமசிங்கவும் கூட்டு அரசாங்கத்தை ஸ்தாபிக்கலாம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் யோசனை முன்வைத்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் விக்டோரியா கோக்லியுடனான நேற்றைய (21) சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறான உடன்படிக்கையை கைச்சாத்திட்டு நாட்டின் முக்கிய பிரச்சினையை இருவரும் தீர்க்க முன்வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலைப் பிரதமராக ஏற்று, மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக்கி இருதரப்பிற்கிடையிலும் உடன்படிக்கையை ஏற்படுத்த முடியும் எனவும் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.