மஹிந்த மீள் எம்முடன் இணையவோ, ஆட்சி செய்யவோ முடியாது – துமிந்த

மஹிந்த ராஜபக்ஷ அர­சி­யலில் ஈடு­ப­டலாம், ஆனால் மீண்டும் நாட் டில் ஆட்­சிக்கு வர முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சியின்  பொதுச் செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான துமிந்த திஸாநாயக்க, தனிப்­பட்ட ரீதியில் மஹிந்த மீது எனக்கு மதிப்­புள்­ளது. ஆனால் அவ­ரது குடும்ப ஆக்­கி­ர­மிப்பு அர­சியல் கொள்­கை­களை எதிர்க்கின்றோம் என்றும் குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க மேலும் தெரிவிக்கையில்;

மஹிந்த ராஜபக்ஷ கட்­சியை அழி­வுப்­பா­தைக்கு கொண்டு சென்றார். கட்சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை மதிக்­க­வில்லை. அவர்கள் ஒதுக்கப்பட்டனர். இவ்­வாறு கட்­சிக்குள் புதி­ய­தொரு குழுவை உருவாக்கினார்.

தனது குடும்­பத்தை மட்­டுமே கட்­சிக்குள் பலப்­ப­டுத்­தினார். தனது தலைவர் பத­விக்­கா­லத்தை அவரும் அவ­ரது குழு­வி­னரும் திரும்பிப் பார்க்க வேண்டும். இவ்­வாறு கட்­சிக்குள் எதிர்ப்­புக்களை சம்­பா­தித்துக் கொண்டார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டு தோல்வி கண்டு பொதுத் தேர்­தலில் குரு­ணா­க­லையில் போட்­டி­யிட்டார். அங்கு 11 ஆக இருந்த எமது எம்.பி.க்களின் தொகை 8 ஆக குறைந்­தது. மஹிந்த பிர­பல்­ய­மா­னவர் என்றால் இவ்­வாறு நடந்­தி­ருக்­குமா?

கடந்த ஆட்­சியில் பிழைகள் செய்­த­வர்­கள் மீண்டும் எமது கட்­சியை தேடி வந்­துள்­ளனர். ஆனால் அவர்­க­ளுக்கு நாங்கள் பதவி வழங்­க­வில்லை. மாறாக கட்­சியை தூய்­மைப்­ப­டுத்தி பலப்­ப­டுத்தும் நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகிறோம்.

மஹிந்தவுக்கு இன்று உண்மை புரிந்திருந்தாலும் மீண்டும் எம்மோடு இணைய முடியாது எனத்தெரிவித்துள்ளார்.