மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை முதலமைச்சர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மேற்குறித்த தகவலை வௌியிட்டுள்ளார்
நாளை(22) முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாம் உள்ளிட்ட சில முதலமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் சமகாலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டு எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.